7 அவர்களைக் கண்டுபிடிக்கிற எல்லாரும் அவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்கள்.+ அவர்களுடைய எதிரிகள், ‘எங்கள்மேல் குற்றம் இல்லை. இவர்கள்தான் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்தார்கள். இவர்களுடைய முன்னோர்கள் நம்பியிருந்த நீதியுள்ள கடவுளான யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்’ என்று சொல்கிறார்கள்.”