-
உபாகமம் 28:52பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
52 உங்கள் தேசத்திலுள்ள எல்லா நகரங்களையும் சுற்றிவளைத்து, வெளியேற வழியில்லாமல் உங்களை அடைத்து வைப்பார்கள். நீங்கள் நம்பியிருக்கிற உயரமான, பலமான மதில்களைத் தரைமட்டமாக்கும்வரை உங்களை வளைத்துக்கொள்வார்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்திருக்கிற தேசத்திலுள்ள நகரங்களைவிட்டு வெளியேற முடியாதபடி உங்களைச் சூழ்ந்துகொள்வார்கள்.+
-
-
2 ராஜாக்கள் 25:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார்+ தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான்.+ நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, அதைச் சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினான்.+ 2 சிதேக்கியா ராஜா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம்வரை முற்றுகை நீடித்தது.
-
-
எசேக்கியேல் 21:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 பாபிலோன் ராஜா அந்த இரண்டு வழிகளும் பிரிகிற இடத்தில் நின்று குறிபார்ப்பான். தன்னுடைய அம்புகளைக் குலுக்கிப்போட்டு, தன்னுடைய சிலைகளிடம்* விசாரிப்பான். கல்லீரலை வைத்துக் குறிபார்ப்பான். 22 அப்போது, எருசலேமுக்குப் போக வேண்டும் என்று அவனுடைய வலது கையில் குறி கிடைக்கும். மதில் இடிக்கும் இயந்திரங்களைக் கொண்டுபோய் நிறுத்தும்படியும், தாக்குதலை ஆரம்பிக்க கட்டளை கொடுக்கும்படியும், போர் முழக்கம் செய்யும்படியும், இயந்திரங்களால் நுழைவாசல்களை இடிக்கும்படியும், சுற்றிலும் மண்மேடுகளை எழுப்பும்படியும், முற்றுகைச் சுவரைக் கட்டும்படியும்+ அவனுக்குக் குறி கிடைக்கும்.
-