உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 23:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 மோசேயின் திருச்சட்ட புத்தகத்தில்+ எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் ரொம்பத் தைரியத்தோடு கடைப்பிடிக்க வேண்டும். அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப்போகக் கூடாது.+ 7 உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற இந்தத் தேசத்தாரோடு சேரவே கூடாது.+ அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை உங்கள் வாயால்கூட உச்சரிக்கக் கூடாது,+ அந்தப் பெயர்களில் சத்தியம் பண்ணவும் கூடாது. அந்தத் தெய்வங்களை நீங்கள் கும்பிடவோ அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ கூடாது.+

  • எரேமியா 2:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 எந்தத் தேசத்து ஜனங்களாவது அவர்களுடைய தெய்வத்தை விட்டுவிட்டு தெய்வமே இல்லாதவற்றை வணங்கியிருக்கிறார்களா?

      ஆனால், என்னுடைய ஜனங்கள் மகிமையுள்ள என்னை விட்டுவிட்டு ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை வணங்குகிறார்கள்.+

  • எரேமியா 12:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “அவர்கள் பாகாலின் பெயரில் சத்தியம் செய்ய என் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தது போலவே, ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை’* என்று சத்தியம் செய்ய அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். என் ஜனங்களைப் போலவே என் வழியில் நடக்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்களை என் ஜனங்களோடு சீரும் சிறப்புமாக வாழ வைப்பேன்.

  • செப்பனியா 1:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 “நான் யூதாவுக்கு எதிராக என் கையை நீட்டுவேன்.

      எருசலேமில் குடியிருக்கிறவர்கள்மேல் என் கையை ஓங்குவேன்.

      பாகாலைச் சுவடு தெரியாமல் அழித்துவிடுவேன்.+

      பொய் தெய்வ பூசாரிகளின் பெயர்களையும் போலி குருமார்களின் பெயர்களையும் ஒழித்துவிடுவேன்.+

       5 மொட்டைமாடிக்குப் போய் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கும்பிடுகிறவர்களையும்,+

      யெகோவாவை மட்டும் வணங்குவதாக அவரிடம் வாக்குக் கொடுத்துவிட்டு,+

      மல்காமிடமும் அதேபோல் வாக்குக் கொடுக்கிறவர்களையும் நான் அழிப்பேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்