உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 51:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 பாபிலோன் யெகோவாவின் கையில் ஒரு தங்கக் கிண்ணத்தைப் போல இருந்தாள்.

      பூமியிலுள்ள எல்லாரும் போதையேறக் குடிக்கும்படி அவள் செய்தாள்.

      அவளுடைய திராட்சமதுவை எல்லா தேசத்து ஜனங்களும் போதையேறக் குடித்தார்கள்.+

      அதனால்தான் பைத்தியக்காரத்தனமாக நடக்கிறார்கள்.+

  • புலம்பல் 4:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஊத்ஸ் தேசத்தில் வாழ்கிற ஏதோம் மகளே, சந்தோஷமாக ஆடிப் பாடு!+

      உன்னிடமும் கிண்ணம் கொடுக்கப்படும்;+ நீ போதை ஏறுமளவுக்குக் குடித்து, ஆபாசமாகக் கிடப்பாய்.+

  • எசேக்கியேல் 23:32-34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

      ‘நீ உன் அக்காவுடைய பெரிய கிண்ணத்திலிருந்து குடித்து,+

      கேலி கிண்டலுக்கு ஆளாவாய்; அந்தக் கிண்ணம் அவற்றால் நிறைந்திருக்கிறது.+

      33 உன் அக்காவான சமாரியாவின் கிண்ணம்

      கோரமான முடிவையும் சீரழிவையும் கொண்டுவருகிற கிண்ணம்.

      நீ அதைக் குடித்துப் போதையில் தள்ளாடுவாய், சோகத்தில் வாடுவாய்.

      34 ஒரு சொட்டு விடாமல் குடித்துவிட்டு,+ அந்த மண் கிண்ணத்தை மெல்லுவாய்.

      அதன்பின், உன் மார்பகங்களை அறுத்தெறிவாய்.*

      “இதை நானே சொல்கிறேன்” என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.’

  • நாகூம் 3:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 உன்னைப் பார்க்கிற எல்லாரும்,

      ‘நினிவே அழிந்துவிட்டது!

      அவளுக்காகப் பரிதாபப்பட ஒருவரும் இல்லை’ என்று சொல்லி ஓடிப்போவார்கள்.+

      உனக்கு ஆறுதல் சொல்ல நான் எங்கே போய் ஆள் தேடுவேன்?

  • நாகூம் 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 நீயும் போதையேற குடிப்பாய்.+

      ஓடி ஒளிந்துகொள்வாய்.

      எதிரியிடமே பாதுகாப்பு தேடுவாய்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்