7 நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை அடியோடு அழிப்பேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன்.+ அப்போது, மற்ற தேசத்து மக்கள் எல்லாரும் இஸ்ரவேல் மக்களை ஏளனமாகப் பேசுவார்கள், கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+
12 “‘நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள். நான் மறுபடியும் மறுபடியும் உங்களோடு பேசியும் நீங்கள் கேட்கவில்லை.+ உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் நீங்கள் பதில் சொல்லவே இல்லை.+
14 ‘சீலோவுக்குச் செய்ததைப் போலவே+ நீங்கள் நம்பியிருக்கிற+ இந்த ஆலயத்துக்கும், அதாவது என் பெயரைத் தாங்கியிருக்கிற இந்த இடத்துக்கும்,+ செய்யப்போகிறேன். உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த இந்தத் தேசத்தைக்கூட அதேபோல் பாழாக்கப்போகிறேன்.
18 என் கடவுளே, காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களுடைய கண்களைத் திறந்து எங்களுடைய பரிதாப நிலையையும், உங்கள் பெயர் தாங்கிய நகரத்தையும் பாருங்கள். எங்கள் செயல்கள் நீதியானவை என்பதால் அல்ல, நீங்கள் மகா இரக்கமானவர் என்பதால் உங்களிடம் கெஞ்சுகிறோம்.+