27 அவர்களுக்கு நான் நல்லது செய்யப்போவதில்லை. அவர்களை எப்போது தண்டிக்கலாம் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.+ எகிப்து தேசத்திலிருக்கிற யூதா ஜனங்கள் எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாகி, அடியோடு அழிந்துபோவார்கள்.+
4 அதனால், கடவுள் உனக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ‘யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, இந்த முழு தேசத்திலும் நான் கட்டியதை இடிக்கப்போகிறேன், நான் நட்டு வைத்ததைப் பிடுங்கி எறியப்போகிறேன்.+