26 அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, இயேசு ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து,* அதைப் பிட்டு+ சீஷர்களிடம் கொடுத்து, “இதைச் சாப்பிடுங்கள், இது என் உடலைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்.
19 பின்பு ரொட்டியை+ எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைப் பிட்டு அவர்களிடம் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும்+ என் உடலைக் குறிக்கிறது.+ என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்”+ என்று சொன்னார்.
23 நம் எஜமானிடமிருந்து பெற்றுக்கொண்டதையே உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்: எஜமானாகிய இயேசு தான் காட்டிக்கொடுக்கப்படவிருந்த இரவில்+ ரொட்டியை எடுத்து, 24 நன்றி சொல்லி அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது.+ என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார்.+