-
மத்தேயு 26:42-46பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
42 மறுபடியும் அவர் இரண்டாவது தடவை போய், “தகப்பனே, நான் இந்தக் கிண்ணத்திலிருந்து குடிப்பதைத் தவிர வேறு வழி இல்லையென்றால், உங்களுடைய விருப்பத்தின்படியே* நடக்கட்டும்”+ என்று சொல்லி ஜெபம் செய்தார். 43 சீஷர்கள் பயங்கர தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், அவர் மறுபடியும் வந்து பார்த்தபோது அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். 44 அதனால் அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், முன்பு சொன்ன விஷயங்களையே சொல்லி மூன்றாவது தடவை ஜெபம் செய்தார். 45 பின்பு சீஷர்களிடம் வந்து, “இப்படிப்பட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறீர்களே! இதோ, மனிதகுமாரன் பாவிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிற நேரம் நெருங்கிவிட்டது. 46 எழுந்திருங்கள், போகலாம். இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் நெருங்கி வந்துவிட்டான்” என்று சொன்னார்.
-