62 அப்போது, தலைமைக் குரு எழுந்து, “உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்கிறார்களே, நீ பதில் சொல்ல மாட்டாயா?”+ என்று அவரிடம் கேட்டார். 63 ஆனால், இயேசு அமைதியாக இருந்தார்.+ அதனால் தலைமைக் குரு, “உயிருள்ள கடவுள்மேல் ஆணையாகச் சொல், நீதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்துவா?”+ என்று கேட்டார்.