உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:69-75
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 69 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார்; அப்போது, ஒரு வேலைக்காரப் பெண் அவரிடம் வந்து, “கலிலேயனாகிய இயேசுவோடு நீயும்தான் இருந்தாய்!”+ என்று சொன்னாள். 70 ஆனால், அவர் எல்லாருக்கும் முன்பாக அதை மறுத்து, “நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்றார். 71 பின்பு, அவர் வாசல் மண்டபத்துக்குப் போனபோது, மற்றொரு பெண் அவரைப் பார்த்து, “நாசரேத்தூர் இயேசுவோடு இந்த ஆளும் இருந்தான்”+ என்று அங்கிருந்தவர்களிடம் சொன்னாள். 72 ஆனால் அவர் மறுபடியும் அதை மறுத்து, “எனக்கு அந்த மனுஷனைத் தெரியவே தெரியாது!” என்று ஆணையிட்டுச் சொன்னார். 73 கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, அங்கு சுற்றிலும் நின்றுகொண்டிருந்தவர்கள் பேதுருவிடம் வந்து, “நிச்சயமாகவே நீயும் அவர்களில் ஒருவன்தான்; உன் பேச்சே* உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்று சொன்னார்கள். 74 அப்போது அவர், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன்மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி, “அந்த மனுஷனை எனக்குத் தெரியவே தெரியாது!” எனச் சத்தியம் செய்ய ஆரம்பித்தார். உடனே சேவல் கூவியது. 75 “சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று மூன்று தடவை நீ சொல்லிவிடுவாய்”+ என்று இயேசு சொன்னது அப்போது பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது. அதனால், அவர் வெளியே போய்க் கதறி அழுதார்.

  • லூக்கா 22:55-62
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 55 முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருந்தவர்களோடு அவரும் உட்கார்ந்துகொண்டார்.+ 56 எரிந்துகொண்டிருந்த நெருப்புக்குப் பக்கத்தில் அவர் உட்கார்ந்திருந்ததை ஒரு வேலைக்காரப் பெண் கண்டு, அவரை உற்றுப் பார்த்து, “இந்த ஆளும் அவரோடு இருந்தான்” என்று சொன்னாள். 57 ஆனால் பேதுரு, “இல்லை, எனக்கு அவரைத் தெரியாது” என்று சொல்லி மறுத்தார். 58 சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அவரைப் பார்த்து, “நீயும் அவர்களில் ஒருவன்தான்” என்று சொன்னான். ஆனால் பேதுரு, “இல்லவே இல்லை”+ என்று சொன்னார். 59 சுமார் ஒரு மணிநேரம் கழித்து வேறொரு ஆள், “நிச்சயமாகவே இந்த மனுஷனும் அவரோடு இருந்தான், இவன் ஒரு கலிலேயன்தான்!” என்று அடித்துச் சொல்ல ஆரம்பித்தான். 60 ஆனால் பேதுரு, “நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்றார். இப்படி அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, உடனடியாக ஒரு சேவல் கூவியது. 61 அப்போது இயேசு திரும்பி, பேதுருவை நேராகப் பார்த்தார். “இன்று சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்” என்று இயேசு தன்னிடம் சொன்னது பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது.+ 62 அதனால், அவர் வெளியே போய்க் கதறி அழுதார்.

  • யோவான் 18:25, 26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 சீமோன் பேதுரு அங்கே நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அப்போது சிலர் அவரிடம், “நீயும் அவனுடைய சீஷன்தானே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்று மறுத்தார்.+ 26 தலைமைக் குருவுடைய வேலைக்காரர்களில் ஒருவன், பேதுருவால் காது வெட்டப்பட்டவனுடைய சொந்தக்காரன்.+ அவன் அவரிடம், “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று சொன்னான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்