-
மத்தேயு 26:57, 58பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
57 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குருவான காய்பாவிடம் கொண்டுபோனார்கள்;+ அங்கே வேத அறிஞர்களும் பெரியோர்களும் கூடியிருந்தார்கள்.+ 58 ஆனால் பேதுரு தூரத்திலிருந்தபடியே அவரைப் பின்தொடர்ந்து, தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம்வரை போனார்; என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்ப்பதற்காக அந்த வீட்டு வேலைக்காரர்களோடு உட்கார்ந்துகொண்டார்.+
-
-
மாற்கு 14:53, 54பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
53 அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம்+ கொண்டுபோனார்கள்; அங்கே முதன்மை குருமார்கள், பெரியோர்கள், வேத அறிஞர்கள் ஆகிய எல்லாரும் கூடியிருந்தார்கள்.+ 54 ஆனால், பேதுரு தூரத்திலிருந்தபடியே அவரைப் பின்தொடர்ந்து போனார்; தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம்வரை போய், அந்த வீட்டு வேலைக்காரர்களோடு உட்கார்ந்து, நெருப்பு பக்கத்தில் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.+
-