உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 11:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆனால், அசைபோடுகிற மிருகங்களில் அல்லது பிளவுபட்ட குளம்புடைய மிருகங்களில் நீங்கள் சாப்பிடக் கூடாதவை இவைதான்: அசைபோடுகிற, ஆனால் குளம்புகள் பிளவுபடாத ஒட்டகம். அது உங்களுக்கு அசுத்தமானது.+

  • லேவியராகமம் 11:13-20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 சில பறவைகள் அருவருப்பானவை என்பதால் அவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது. நீங்கள் அருவருக்க வேண்டிய பறவைகள் இவைதான்: கழுகு,+ கடல் பருந்து, கறுப்பு ராஜாளி,+ 14 சிவப்புப் பருந்து, எல்லா வகையான கறுப்புப் பருந்து, 15 எல்லா வகையான அண்டங்காக்கை, 16 நெருப்புக்கோழி, ஆந்தை, கடல் புறா, எல்லா வகையான வல்லூறு, 17 சிறு ஆந்தை, நீர்க்காகம், நெட்டைக்காது ஆந்தை, 18 அன்னம், கூழைக்கடா, ராஜாளி, 19 நாரை, எல்லா வகையான கொக்கு, கொண்டலாத்தி, வவ்வால். 20 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த பூச்சிகள் எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும்.

  • லேவியராகமம் 20:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 சுத்தமான மிருகத்துக்கும் அசுத்தமான மிருகத்துக்கும், சுத்தமான பறவைக்கும் அசுத்தமான பறவைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.+ அசுத்தமென்று நான் விலக்கிய மிருகத்தாலோ பறவையாலோ ஊரும் பிராணியாலோ நீங்கள் உங்களை அருவருப்பானவர்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.+

  • உபாகமம் 14:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அருவருப்பான எதையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+

  • உபாகமம் 14:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஊர்ந்து போகிற, சிறகுள்ள பூச்சிகள் எல்லாமே உங்களுக்கு அசுத்தமானது. அவற்றைச் சாப்பிடக் கூடாது.

  • எசேக்கியேல் 4:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அப்போது நான், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இதை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள்! சிறு வயதிலிருந்தே நான் தீட்டுப்பட்ட உணவைச் சாப்பிட்டதில்லை. தானாகச் செத்துப்போன மிருகத்தையோ, இன்னொரு மிருகத்தால் கடித்துக் குதறிப்போடப்பட்ட மிருகத்தையோ நான் சாப்பிட்டதில்லை.+ அசுத்தமான எந்த இறைச்சியும் என் வாய்க்குள் போனதில்லை”+ என்று சொன்னேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்