உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 26
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

யாத்திராகமம் முக்கியக் குறிப்புகள்

      • வழிபாட்டுக் கூடாரம் (1-37)

        • கூடாரத்தின் விரிப்புகள் (1-14)

        • மரச் சட்டங்களும் அவற்றை நிறுத்துவதற்கான பாதங்களும் (15-30)

        • திரைச்சீலையும் திரையும் (31-37)

யாத்திராகமம் 26:1

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “லினன்.”

  • *

    வே.வா., “எம்பிராய்டரி.”

இணைவசனங்கள்

  • +எபி 8:5; 9:9, 11
  • +ஆதி 3:24; சங் 99:1
  • +யாத் 36:8-13

யாத்திராகமம் 26:2

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +எண் 4:25

யாத்திராகமம் 26:4

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “நூல் வளையங்களை.”

யாத்திராகமம் 26:6

இணைவசனங்கள்

  • +யாத் 39:33, 34

யாத்திராகமம் 26:7

இணைவசனங்கள்

  • +யாத் 35:26
  • +யாத் 36:14-18

யாத்திராகமம் 26:14

இணைவசனங்கள்

  • +யாத் 36:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    10/22/1994, பக். 31

யாத்திராகமம் 26:15

அடிக்குறிப்புகள்

  • *

    இவை செங்கோண வடிவ சட்டங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 36:20-23; எண் 4:29, 31

யாத்திராகமம் 26:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கால்கள்.”

யாத்திராகமம் 26:19

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சட்டங்களின் புடைப்பான பகுதிகளைப் பொருத்துவதற்கு ஏற்ற குழிகள்கொண்ட அடிபீடங்கள்.”

இணைவசனங்கள்

  • +எண் 3:36
  • +யாத் 36:24-26

யாத்திராகமம் 26:22

இணைவசனங்கள்

  • +யாத் 36:27-30

யாத்திராகமம் 26:26

இணைவசனங்கள்

  • +யாத் 36:31-33

யாத்திராகமம் 26:29

இணைவசனங்கள்

  • +யாத் 12:35, 36; 36:34

யாத்திராகமம் 26:30

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வடிவத்திலேயே.”

இணைவசனங்கள்

  • +யாத் 19:3; 25:9; அப் 7:44; எபி 8:5

யாத்திராகமம் 26:31

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “எம்பிராய்டரி.”

இணைவசனங்கள்

  • +யாத் 36:35, 36; லூ 23:45; எபி 6:19; 9:3; 10:19, 20

யாத்திராகமம் 26:33

இணைவசனங்கள்

  • +1ரா 8:6
  • +யாத் 40:22, 26
  • +யாத் 40:21; லேவி 16:2; 1ரா 8:6; எபி 9:2-4, 12, 24

யாத்திராகமம் 26:35

இணைவசனங்கள்

  • +லேவி 24:2, 3; 1ரா 7:48, 49

யாத்திராகமம் 26:36

இணைவசனங்கள்

  • +யாத் 36:37, 38

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

யாத். 26:1எபி 8:5; 9:9, 11
யாத். 26:1ஆதி 3:24; சங் 99:1
யாத். 26:1யாத் 36:8-13
யாத். 26:2எண் 4:25
யாத். 26:6யாத் 39:33, 34
யாத். 26:7யாத் 35:26
யாத். 26:7யாத் 36:14-18
யாத். 26:14யாத் 36:19
யாத். 26:15யாத் 36:20-23; எண் 4:29, 31
யாத். 26:19எண் 3:36
யாத். 26:19யாத் 36:24-26
யாத். 26:22யாத் 36:27-30
யாத். 26:26யாத் 36:31-33
யாத். 26:29யாத் 12:35, 36; 36:34
யாத். 26:30யாத் 19:3; 25:9; அப் 7:44; எபி 8:5
யாத். 26:31யாத் 36:35, 36; லூ 23:45; எபி 6:19; 9:3; 10:19, 20
யாத். 26:331ரா 8:6
யாத். 26:33யாத் 40:22, 26
யாத். 26:33யாத் 40:21; லேவி 16:2; 1ரா 8:6; எபி 9:2-4, 12, 24
யாத். 26:35லேவி 24:2, 3; 1ரா 7:48, 49
யாத். 26:36யாத் 36:37, 38
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
யாத்திராகமம் 26:1-37

யாத்திராகமம்

26 பின்பு அவர், “வழிபாட்டுக் கூடாரத்தை+ 10 விரிப்புகளால் அமைக்க வேண்டும். உயர்தரமான திரித்த நாரிழை,* நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இந்த விரிப்புகளைச் செய்ய வேண்டும். இந்த விரிப்புகள்மேல் கேருபீன்களின்+ வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 2 ஒவ்வொரு விரிப்பும் 28 முழ* நீளத்திலும், 4 முழ அகலத்திலும் இருக்க வேண்டும். எல்லா விரிப்புகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.+ 3 ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் மற்ற ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் இணைக்க வேண்டும். 4 இணைக்கப்பட்ட ஒரு விரிப்பின் ஓரத்தில் நீல நிற நூலால் காதுகளை* தைக்க வேண்டும்; இணைக்கப்பட்ட மற்றொரு விரிப்பின் ஓரத்திலும் அதேபோல் காதுகளைத் தைக்க வேண்டும். இந்த இரண்டு விரிப்புகளையும் சேர்ப்பதற்காக இப்படிச் செய்ய வேண்டும். 5 ஒவ்வொரு விரிப்பிலும் 50 காதுகளைத் தைக்க வேண்டும். ஒரு விரிப்பிலுள்ள காதுகள் மற்ற விரிப்பின் ஓரத்திலுள்ள காதுகளோடு இணையும்படி நேருக்கு நேர் இருக்க வேண்டும். 6 தங்கத்தில் 50 கொக்கிகள் செய்து, அவற்றால் அந்த இரண்டு விரிப்புகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அப்போது, முழு கூடாரமும் ஒரே விரிப்பால் அமைக்கப்பட்டதாக இருக்கும்.+

7 வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் விரிப்பதற்கு வெள்ளாட்டு மயிரால்+ 11 கம்பளிகளைச் செய்ய வேண்டும்.+ 8 ஒவ்வொரு கம்பளியும் 30 முழ நீளத்திலும், 4 முழ அகலத்திலும் இருக்க வேண்டும். 11 கம்பளிகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும். 9 ஐந்து கம்பளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். ஆறாம் கம்பளியைக் கூடாரத்தின் முன்புறத்தில் பாதியாக மடித்துப் போட வேண்டும். 10 இணைக்கப்பட்ட ஒரு கம்பளியின் ஓரத்தில் 50 காதுகளைத் தைக்க வேண்டும். இணைக்கப்பட்ட மற்றொரு கம்பளியின் ஓரத்திலும் 50 காதுகளைத் தைக்க வேண்டும். ஒரு கம்பளியின் காதுகள் மற்ற கம்பளியின் காதுகளோடு இணையும்படி இருக்க வேண்டும். 11 செம்பினால் 50 கொக்கிகளைச் செய்து, அந்தக் கொக்கிகளால் காதுகளை இணைக்க வேண்டும். அப்போது, முழு கூடாரத்துக்கும் ஒரே கம்பளி இருக்கும். 12 நாரிழை விரிப்பைவிட நீளமாக இருக்கும் கம்பளியின் பகுதி தொங்கவிடப்பட வேண்டும். அதாவது, வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்தில் அது இரண்டு முழத்துக்கு தொங்கவிடப்பட வேண்டும். 13 வழிபாட்டுக் கூடாரத்தின் இரண்டு பக்கங்களிலும் நீண்டிருக்கும் ஒரு முழப் பகுதியும் அப்படியே தொங்கவிடப்பட வேண்டும். அவை கூடாரத்தின் இரண்டு பக்கங்களையும் மூட வேண்டும்.

14 அதோடு, கம்பளிமேல் போடுவதற்கு சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோலினால் ஒரு விரிப்பைச் செய்ய வேண்டும். அதன்மேல் போடுவதற்கு கடல்நாய்த் தோலினால் ஒரு விரிப்பைச் செய்ய வேண்டும்.+

15 வழிபாட்டுக் கூடாரத்துக்காக வேல மரத்தால் செங்குத்தான சட்டங்களை* செய்ய வேண்டும்.+ 16 ஒவ்வொரு சட்டமும் 10 முழ உயரமும், ஒன்றரை முழ அகலமுமாக இருக்க வேண்டும். 17 ஒவ்வொரு சட்டத்தின் அடிபாகத்திலும் இரண்டு புடைப்புகள்* அடுத்தடுத்து இருக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா சட்டங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும். 18 வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில் நிறுத்துவதற்காக 20 சட்டங்கள் செய்ய வேண்டும்.

19 அந்த 20 சட்டங்களின் கீழே வைப்பதற்காக 40 வெள்ளிப் பாதங்களை*+ செய்ய வேண்டும்; ஒரு சட்டத்திலுள்ள இரண்டு புடைப்புகளுக்காக இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் பாதங்களை வைக்க வேண்டும்.+ 20 வழிபாட்டுக் கூடாரத்தின் இன்னொரு பக்கத்துக்காக, அதாவது வடக்குப் பக்கத்துக்காக, 20 சட்டங்களையும், 21 அவற்றுக்காக 40 வெள்ளிப் பாதங்களையும் செய்ய வேண்டும். ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டு பாதங்களை வைக்க வேண்டும். 22 வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஆறு சட்டங்களைச் செய்ய வேண்டும்.+ 23 வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்திலுள்ள இரண்டு மூலைகளுக்கும் இரண்டு மூலைச்சட்டங்களைச் செய்ய வேண்டும். 24 ஒவ்வொரு மூலைச்சட்டத்துக்கும் இரண்டு கட்டைகளைக் கூம்பு வடிவத்தில் வைத்து, முதல் வளையம் இருக்கிற இடத்தில் இணைக்க வேண்டும். கூடாரத்தின் இரண்டு பக்கத்திலுள்ள மூலைச்சட்டங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும். 25 ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டிரண்டு பாதங்கள் இருக்க வேண்டும். அதாவது, 8 சட்டங்களுக்கு 16 வெள்ளிப் பாதங்கள் இருக்க வேண்டும்.

26 வேல மரத்தால் கம்புகளைச் செய்ய வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்ய வேண்டும்.+ 27 வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்ய வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஐந்து கம்புகளைச் செய்ய வேண்டும். 28 சட்டங்களை இணைப்பதற்காக அவற்றின் நடுப்பகுதியில் செருகப்படும் கம்பு, ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை ஒரே கம்பாக இருக்க வேண்டும்.

29 சட்டங்களுக்குத் தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.+ கம்புகளைச் செருகுவதற்கான வளையங்களைத் தங்கத்தில் செய்ய வேண்டும். கம்புகளுக்கும் தங்கத் தகடு அடிக்க வேண்டும். 30 மலையில் உனக்குக் காட்டப்பட்ட மாதிரியின்படியே* வழிபாட்டுக் கூடாரத்தைச் செய்ய வேண்டும்.+

31 நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்ய வேண்டும். அதன்மேல் கேருபீன்களின் வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும். 32 வேல மரத்தால் செய்யப்பட்டு, தங்கத்தால் தகடு அடிக்கப்பட்ட நான்கு தூண்களில் இந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். வெள்ளியில் செய்யப்பட்ட நான்கு பாதங்களின் மேல் இந்தத் தூண்களை நிறுத்த வேண்டும். 33 இந்தத் திரைச்சீலையைக் கூடார விரிப்புகள் இணைக்கப்பட்ட கொக்கிகளுக்குக் கீழே மாட்ட வேண்டும். திரைச்சீலைக்கு உள்பக்கம் சாட்சிப் பெட்டியை+ வைக்க வேண்டும். இந்தத் திரைச்சீலை பரிசுத்த அறையையும்+ மகா பரிசுத்த அறையையும்+ பிரிக்கும். 34 சாட்சிப் பெட்டிக்கு மூடி போட்டு, அதை மகா பரிசுத்த அறையில் வைக்க வேண்டும்.

35 திரைச்சீலைக்கு வெளிப்பக்கம் மேஜையை வைக்க வேண்டும். வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில், மேஜைக்கு எதிரில் குத்துவிளக்கை வைக்க வேண்டும்.+ மேஜையை வடக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். 36 வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி, கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரையை நெய்ய வேண்டும்.+ 37 திரையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தில் ஐந்து தூண்களைச் செய்து அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்ய வேண்டும். அவற்றுக்காக, செம்பில் ஐந்து பாதங்களை வார்க்க வேண்டும்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்