23 பல வருஷங்களுக்குப் பின்பு எகிப்தின் ராஜா இறந்துபோனான்.+ ஆனால், இஸ்ரவேலர்கள் அடிமைகளாகவே இருந்ததால் வேதனையில் குமுறினார்கள், அழுது புலம்பினார்கள். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கேட்டு உண்மைக் கடவுளிடம் தொடர்ந்து கெஞ்சிக் கதறினார்கள்.+
7 அதன் பின்பு யெகோவா, “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.+