10 அதோடு, உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பறிக்காமல் விடப்பட்ட பழங்களையோ கீழே விழுந்து கிடக்கிற பழங்களையோ எடுக்கக் கூடாது. அவற்றை ஏழைகளுக்காகவும் உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்காகவும் விட்டுவிட வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
14 கஷ்டத்திலும் வறுமையிலும் வாடுகிற கூலியாளுக்குக் கூலி தராமல் ஏமாற்றக் கூடாது, அவன் உங்கள் சகோதரனாக இருந்தாலும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனாக இருந்தாலும் சரி.+