5 பெலிஸ்தியர்களின் தலைவர்கள் அவளிடம் வந்து, “அவனுக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது என்பதை அவன் வாயிலிருந்தே தந்திரமாக வர வை.+ நாங்கள் அவனை எப்படிப் பிடித்துக் கட்டிப்போட்டு அடக்கலாம் என்பதையும் கண்டுபிடி. அதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு 1,100 வெள்ளிக் காசுகள் தருகிறோம்” என்று சொன்னார்கள்.