19 அவர்கள் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து யெகோவாவை வணங்கினார்கள். பின்பு, ராமாவிலுள்ள தங்களுடைய வீட்டுக்குத்+ திரும்பிப் போனார்கள். எல்க்கானா தன்னுடைய மனைவி அன்னாளுடன் உறவுகொண்டார். யெகோவா அவளுடைய வேண்டுதலை நினைத்துப் பார்த்தார்.+
17 பின்பு, ஒவ்வொரு முறையும் ராமாவுக்குத்+ திரும்பினார். ஏனென்றால், அவருடைய வீடு அங்கே இருந்தது. அங்கேயும் இஸ்ரவேலர்களுக்கு அவர் நீதி வழங்கிவந்தார். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார்.+