10 குருமார்களாகச் சேவை செய்ய ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நீ நியமிக்க வேண்டும்.+ ஆனால், தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.
7 குருவானவர் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.* சட்டத்தை* கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக ஜனங்கள் அவரைத் தேடி வர வேண்டும்.+ ஏனென்றால், அவரே பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சார்பில் பேசுபவர்.