-
2 ராஜாக்கள் 9:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 யெகூ சட்டென்று தன்னுடைய வில்லை எடுத்து யோராமின் முதுகில் அம்பு எறிந்தார், அது அவருடைய நெஞ்சைத் துளைத்துக்கொண்டு வெளியே வந்தது. யோராம் தன்னுடைய ரதத்தில் செத்து விழுந்தார்.
-
-
2 ராஜாக்கள் 10:6, 7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 பின்பு, அவர்களுக்கு இரண்டாவதாக ஒரு கடிதத்தை யெகூ எழுதினார். அதில், “நீங்கள் என் பக்கம் இருந்தால், என் பேச்சைக் கேட்கத் தயாராக இருந்தால், நாளைக்கு இதே நேரம் உங்கள் எஜமானுடைய மகன்களின் தலைகளோடு யெஸ்ரயேலுக்கு வந்து என்னைப் பாருங்கள்” என்று எழுதினார்.
அந்த இளவரசர்கள் 70 பேரும் தங்களை வளர்த்துவந்த பிரமுகர்களுடன் இருந்தார்கள். 7 அந்தக் கடிதம் கிடைத்ததும், இளவரசர்கள் 70 பேரையும் பிடித்து அவர்கள் வெட்டிக் கொன்றார்கள்.+ அவர்களுடைய தலைகளைக் கூடைகளில் போட்டு யெஸ்ரயேலில் இருந்த யெகூவிடம் அனுப்பினார்கள்.
-
-
2 ராஜாக்கள் 10:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 தகன பலி கொடுத்தவுடன் காவலாளிகளையும் படை அதிகாரிகளையும் யெகூ கூப்பிட்டு, “உள்ளே வந்து வெட்டிக் கொல்லுங்கள், ஒருவனைக்கூட விடாதீர்கள்!”+ என்று கட்டளையிட்டார். உடனே காவலாளிகளும் படை அதிகாரிகளும் உள்ளே போய் அவர்களை வாளால் வெட்டிக் கொன்றார்கள், உடல்களை வெளியே வீசினார்கள். பாகால் கோயிலின் கருவறைவரைக்கும்* போய் அவர்களை வெட்டிச் சாய்த்தார்கள்.
-