36 இப்படி, லோத்துவின் இரண்டு மகள்களும் தங்கள் அப்பாவினால் கர்ப்பமானார்கள். 37 பெரியவளுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு மோவாப்+ என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று மோவாபியர்கள்+ என்று சொல்கிறோம்.
2 அவர் மோவாபியர்களைத்+ தோற்கடித்து, அவர்களை வரிசையாகத் தரையில் படுக்க வைத்தார். அந்த வரிசையை அளவுநூலால் அளந்தார்; அந்த வரிசையில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்களைக் கொன்றுபோட்டார்; ஒரு பங்கு ஆட்களை உயிரோடு விட்டுவிட்டார்.+ மோவாபியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.+