10 உடனே, வீட்டுக்குள் இருந்த மனிதர்கள் கையை நீட்டி, லோத்துவை உள்ளே இழுத்துக்கொண்டு, கதவைச் சாத்தினார்கள். 11 பின்பு, வீட்டு வாசலில் இருந்த சிறுவன்முதல் கிழவன்வரை எல்லா ஆண்களுடைய கண்களையும் குருடாக்கினார்கள். அதனால் அவர்கள் வாசல் கதவைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.