-
யோசுவா 4:5-7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அவர்களிடம், “நீங்கள் யோர்தானுக்கு நடுவே உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகப் போங்கள். இஸ்ரவேல் கோத்திரங்களின் எண்ணிக்கைப்படி, ஆளுக்கு ஒரு கல்லை எடுத்து தோள்களில் சுமந்துகொண்டு வாருங்கள். 6 இந்தக் கற்கள் உங்களுக்கு அடையாளச் சின்னங்களாக இருக்கும். எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் உங்களிடம், ‘இந்தக் கற்கள் ஏன் இங்கே இருக்கின்றன?’ என்று கேட்டால்,+ 7 நீங்கள் அவர்களிடம், ‘ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் யோர்தான் ஆற்றை யெகோவா பிரிந்துபோக வைத்தார்.+ அதனால், அந்தப் பெட்டி யோர்தானைக் கடந்துபோனபோது தண்ணீர் பிரிந்து நின்றது. இந்தக் கற்கள் இந்தச் சம்பவத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு என்றென்றும் ஞாபகப்படுத்தும்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
-