உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:66
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 66 அதற்கு அடுத்த நாள் மக்களை அனுப்பி வைத்தார். அவர்களும் ராஜாவை வாழ்த்திவிட்டு தங்களுடைய வீடுகளுக்கு மிகவும் சந்தோஷமாகத் திரும்பிப் போனார்கள். யெகோவா தன்னுடைய ஊழியரான தாவீதுக்கும் அவருடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கும் செய்த எல்லா நன்மைகளையும்+ நினைத்து மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.

  • சங்கீதம் 13:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 யெகோவா என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்திருப்பதால்+ அவரைப் புகழ்ந்து பாடுவேன்.

  • சங்கீதம் 31:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 நீங்கள் தரும் நன்மைகள் எவ்வளவு ஏராளம்!+

      உங்களுக்குப் பயந்து நடப்பவர்களுக்காக அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள்.+

      உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்காக எல்லார் முன்னாலும் அவற்றைப் பொழிந்திருக்கிறீர்கள்.+

  • ஏசாயா 63:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  7 யெகோவா மாறாத அன்போடு செய்த செயல்களையும்

      அவருக்குப் புகழ் சேர்க்கும்படி செய்த செயல்களையும் பற்றி நான் சொல்வேன்.

      ஏனென்றால், யெகோவா இரக்கத்தினாலும் அளவுகடந்த அன்பினாலும்*

      எங்களுக்காக நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறார்.+

      இஸ்ரவேல் ஜனங்களுக்காக யெகோவா நிறைய நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார்.

  • எரேமியா 31:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+

      யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்

      ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.

      அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும்.

      தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.

      அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்