5 உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும்.+ ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது,+ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை.+
10 உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில்* வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.+