43 யோசபாத் தன்னுடைய அப்பாவான ஆசாவின் வழியில் நடந்துவந்தார்,+ அதைவிட்டு விலகவில்லை; யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்துவந்தார்.+ இருந்தாலும், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை;+ மக்கள் இன்னமும் அங்கே பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்துகொண்டிருந்தார்கள்.