25 ஏனென்றால், இந்த மக்கள் என்னை விட்டுவிட்டு,+ மற்ற தெய்வங்களுக்கு முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்கிறார்கள். அவர்களுடைய கைவேலைகள் எல்லாவற்றாலும் என்னைப் புண்படுத்துகிறார்கள்.+ அதனால், இந்த இடத்தின் மீது என்னுடைய கடும் கோபத்தைக் கொட்டுவேன், அது அணையவே அணையாது.’”+