-
சங்கீதம் 146:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 கண் தெரியாதவர்களின் கண்களை யெகோவா திறக்கிறார்.+
துவண்டுபோனவர்களை யெகோவா தூக்கி நிறுத்துகிறார்.+
நீதிமான்களை யெகோவா நேசிக்கிறார்.
-
மத்தேயு 9:28-30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 அவர் வீட்டுக்குள் போன பின்பு, கண் தெரியாத அந்த ஆட்கள் அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களிடம், “என்னால் உங்களுக்குப் பார்வை கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?”+ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆமாம், எஜமானே” என்று சொன்னார்கள். 29 அப்போது அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு நடக்கட்டும்” என்று சொன்னார். 30 உடனே அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.+ இயேசு அவர்களிடம், “இந்த விஷயம் யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்”+ என்று கண்டிப்புடன் சொன்னார்.
-
-
-