உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 19:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 அதற்கு இயேசு, “நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா;+ அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்”+ என்று சொன்னார்.

  • மாற்கு 10:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 இயேசு அன்போடு அவனைப் பார்த்து, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது; நீ போய் உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா; அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்”+ என்று சொன்னார்.

  • லூக்கா 12:33, 34
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 33 உங்கள் சொத்துகளை விற்று தானதர்மம்* செய்யுங்கள்.+ இற்றுப்போகாத பணப் பைகளை உங்களுக்காகச் செய்துகொள்ளுங்கள்; அதாவது, ஒருபோதும் குறையாத பொக்கிஷத்தைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்;+ அங்கே திருடனும் நெருங்க மாட்டான், பூச்சியும்* அரிக்காது. 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்.

  • லூக்கா 18:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 இயேசு இதைக் கேட்டபோது, “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது: நீ போய் உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா. அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்”+ என்று சொன்னார்.

  • 1 தீமோத்தேயு 6:17
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 இந்த உலகத்தில்* செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாதென்று அவர்களுக்கு அறிவுரை சொல்; நிலையில்லாத செல்வங்கள்மீது+ நம்பிக்கை வைக்காமல், நம்முடைய சந்தோஷத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்குகிற கடவுள்+ மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்