-
மாற்கு 13:14-18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 இருந்தாலும், பாழாக்கும் அருவருப்பு+ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் பார்க்கும்போது (வாசிப்பவர் பகுத்தறிவைப் பயன்படுத்தி இதைப் புரிந்துகொள்ளட்டும்), யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும்.+ 15 வீட்டு மாடியில் இருப்பவர் கீழே இறங்கிவர வேண்டாம், எதையாவது எடுத்துக்கொண்டு போவதற்காகத் தன் வீட்டுக்குள் போகவும் வேண்டாம். 16 வயலில் இருப்பவர் தன் மேலங்கியை எடுப்பதற்காகத் திரும்பிப் போக வேண்டாம். 17 அந்த நாட்களில் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஐயோ ஆபத்து!+ 18 இது குளிர் காலத்தில் நடந்துவிடக் கூடாது என்று ஜெபம் செய்துகொண்டிருங்கள்.
-