-
மாற்கு 14:55-59பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
55 இதற்கிடையில், முதன்மை குருமார்களும் நியாயசங்க உறுப்பினர்கள் எல்லாரும், இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை.+ 56 நிறைய பேர் அவருக்கு எதிராகப் பொய் சாட்சி+ சொன்னபோதிலும் அவை ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. 57 அதோடு, சிலர் வந்து அவருக்கு எதிராகப் பொய் சாட்சி சொன்னார்கள். 58 “‘கைகளால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கி, கைகளால் கட்டப்படாத வேறொரு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன்’ என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்”+ என்றார்கள். 59 இந்த விஷயத்திலும்கூட அவர்கள் சொன்ன சாட்சி ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருந்தது.
-