29 நான் சாந்தமும்+ மனத்தாழ்மையுமாக+ இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை* உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்;* அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
13 இயேசு இதைக் கேட்டதும், கொஞ்ச நேரம் தனியாக இருப்பதற்காகப் படகில் ஏறி, ஒதுக்குப்புறமான ஓர் இடத்துக்குப் போனார்; ஆனால் மக்கள் இதைக் கேள்விப்பட்டு, தங்கள் நகரங்களிலிருந்து நடந்தே அவரிடம் போனார்கள்.+