21 அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள்.
ஓய்வுநாள் வந்ததும் அவர் ஜெபக்கூடத்துக்குப் போய்க் கற்பிக்க ஆரம்பித்தார்.+ 22 அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்; ஏனென்றால், அவர் வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராகக் கற்பித்தார்.+