உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 2:1-11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 மூன்றாம் நாள் கலிலேயாவில் இருக்கிற கானா ஊரில் ஒரு கல்யாண விருந்து நடந்தது. இயேசுவின் அம்மா அங்கே வந்திருந்தார். 2 இயேசுவும் அவருடைய சீஷர்களும்கூட அந்தக் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

      3 திராட்சமது கிட்டத்தட்ட தீர்ந்துபோனபோது இயேசுவின் அம்மா, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சமது இல்லை” என்று அவரிடம் சொன்னார். 4 அப்போது இயேசு, “பெண்மணியே, அதற்கு நாம் என்ன செய்வது?* என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை” என்று சொன்னார். 5 அதனால் அவருடைய அம்மா, “அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்” என்று பரிமாறுகிறவர்களிடம் சொன்னார். 6 யூதர்களுடைய தூய்மைச் சடங்குக்குத்+ தேவையான ஆறு தண்ணீர் ஜாடிகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கல்ஜாடிகள் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று குடம்* தண்ணீர் பிடிப்பவை. 7 பரிமாறுகிறவர்களைப் பார்த்து இயேசு, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவற்றின் விளிம்புவரை நிரப்பினார்கள். 8 பின்பு அவர்களிடம், “இதிலிருந்து எடுத்துக்கொண்டு போய் விருந்தின் மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அப்படியே செய்தார்கள். 9 திராட்சமதுவாக மாற்றப்பட்ட தண்ணீரை மேற்பார்வையாளர் ருசிபார்த்தார். அந்தத் திராட்சமது எப்படி வந்ததென்று அதைக் கொண்டுவந்தவர்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும் அவருக்குத் தெரியவில்லை. அதனால், அந்த மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 10 “எல்லாரும் தரமான திராட்சமதுவை முதலில் பரிமாறிவிட்டு, விருந்தாளிகள் மனம்போல் குடித்த பிறகு தரம் குறைந்ததைப் பரிமாறுவார்கள். ஆனால், நீங்கள் தரமான திராட்சமதுவை இதுவரை வைத்திருக்கிறீர்களே” என்று சொன்னார். 11 கலிலேயாவில் இருக்கிற கானா ஊரில் இயேசு இந்த முதல் அற்புதத்தைச் செய்து, தன்னுடைய வல்லமையைக் காட்டினார்.+ அவருடைய சீஷர்கள் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்