31 ஏனென்றால், தான் நியமித்த ஒரு மனுஷர் மூலம் இந்த உலகத்தை நீதியோடு நியாயந்தீர்க்க அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.+ இறந்துபோன அந்த மனுஷரை உயிர்த்தெழுப்பியதன் மூலம் அதற்கான உத்தரவாதத்தை எல்லா மனுஷர்களுக்கும் கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்.
12 இறந்துபோன பெரியவர்களும் சிறியவர்களும் சிம்மாசனத்துக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தேன். அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன. வாழ்வின் சுருள்+ என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது. அந்தச் சுருள்களில் எழுதப்பட்டிருக்கிறபடியே, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+