9 அவன் கடவுளைப் புகழ்ந்துகொண்டு நடந்துபோவதை அங்கிருந்த எல்லா மக்களும் பார்த்தார்கள். 10 வழக்கமாக ஆலயத்தின் ‘அழகு நுழைவாசலில்’ உட்கார்ந்துகொண்டு பிச்சை கேட்பவன்தான்+ அவன் என்பதைத் தெரிந்துகொண்டு, அவனுக்கு நடந்த அற்புதத்தைப் பார்த்து மலைத்துப்போனார்கள், பிரமிப்பும் பூரிப்பும் அடைந்தார்கள்.