24 “இங்கிருந்து போய்விடுங்கள்; சிறுமி சாகவில்லை, அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்”+ என்று சொன்னார். அவர்களோ அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள். 25 கூட்டத்தாரை வெளியே அனுப்பியவுடன், அவர் உள்ளே போய் அந்தச் சிறுமியின் கையைப் பிடித்தார்,+ அப்போது அவள் எழுந்துகொண்டாள்.+