7 அவர்களுடைய கால்கள் கெட்டதைச் செய்ய ஓடுகின்றன.
அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்த வேகமாகப் போகின்றன.+
அவர்கள் எப்போதும் கெட்டதையே யோசிக்கிறார்கள்.
எப்போதுமே மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள்.+
8 சமாதான வழியில் அவர்கள் கால்வைத்ததே இல்லை.
அவர்களுடைய பாதைகளில் நியாயம் இல்லை.+
அவர்களுடைய வழிகள் குறுக்கு வழிகள்.
அந்த வழிகளில் போகிறவர்களுக்குச் சமாதானமே கிடைக்காது.+