3 புத்தியை சத்தமாகக் கூப்பிட்டால்,+
பகுத்தறிவை உரத்த குரலில் அழைத்தால்,+
4 வெள்ளியைத் தேடுவதுபோல் அவற்றை விடாமல் தேடினால்,+
புதையல்களைத் தேடுவதுபோல் தொடர்ந்து தேடினால்,+
5 அப்போது, யெகோவாவுக்குப் பயப்படுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வாய்,+
கடவுளைப் பற்றிய அறிவைக் கண்டடைவாய்.+
6 ஏனென்றால், யெகோவாவே ஞானத்தைக் கொடுக்கிறார்.+
அவருடைய வாய் அறிவையும் பகுத்தறிவையும் பொழிகிறது.