12 நீங்கள் சந்தோஷமாக வாழ விரும்புகிறீர்களா?
நீண்ட காலத்துக்கு நன்றாக வாழ ஆசைப்படுகிறீர்களா?+
נ [நூன்]
13 அப்படியானால், கெட்ட விஷயங்களைப் பேசாதபடி உங்கள் நாவையும்,+
பொய் பேசாதபடி உங்கள் உதடுகளையும் அடக்கி வையுங்கள்.+
ס [சாமெக்]
14 கெட்டதைவிட்டு விலகி, நல்லது செய்யுங்கள்.+
சமாதானத்தைத் தேடுங்கள், அதற்காகவே பாடுபடுங்கள்.+
ע [ஆயின்]
15 யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன.+
அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன.+
פ [பே]
16 ஆனால், யெகோவாவுடைய முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.
அவர்களைப் பற்றிய நினைவுகூட இந்தப் பூமியில் இல்லாதபடி அவர் செய்துவிடுவார்.+