13 மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை.+ ஆனால், கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார்.+ அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார்.+
18 பொல்லாத செயல்கள் எல்லாவற்றிலிருந்தும் நம் எஜமான் என்னை விடுவித்து, காப்பாற்றி, அவருடைய பரலோக அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்வார்.+ அவருக்கே என்றென்றும் மகிமை சொந்தம். ஆமென்.*
10 என் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன்படியே நடந்துகொண்டாய்.*+ அதனால், பூமி முழுவதும் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காக அவர்கள் எல்லார்மீதும் வரப்போகிற சோதனை நேரத்தில் நான் உன்னைப் பாதுகாப்பேன்.+