3 கிறிஸ்து இயேசுவின் சேவையில் என் சக வேலையாட்களாக இருக்கிற பிரிஸ்கில்லாளுக்கும் ஆக்கில்லாவுக்கும்+ என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். 4 எனக்காக அவர்கள் தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள்.+ அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், மற்ற தேசத்தாரின் எல்லா சபைகளும்கூட நன்றி சொல்கின்றன.
8 இப்படி, உங்கள்மேல் கனிவான பாசம் வைத்திருப்பதால், கடவுளுடைய நல்ல செய்தியை மட்டுமல்ல, எங்கள் உயிரையே உங்களுக்காகக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்;+ அந்தளவுக்கு நீங்கள் எங்களுடைய அன்புக்குரியவர்களாக ஆகியிருந்தீர்கள்.+