உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 22:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 பின்பு மிகாயா, “யெகோவா சொல்வதைக் கேளுங்கள். யெகோவா தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ பரலோகப் படை முழுவதும் அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தது.+

  • ஏசாயா 6:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 உசியா ராஜா இறந்துபோன+ வருஷம் அது. யெகோவா மிகவும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ அவருடைய நீளமான அங்கி ஆலயம் முழுவதும் பரவியிருந்தது.

  • எசேக்கியேல் 1:26, 27
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 அவற்றின் தலைகளுக்கு மேலே இருந்த தளத்தின் மேல் நீலமணிக் கல்லைப் போல+ ஒன்று தெரிந்தது. அது பார்ப்பதற்குச் சிம்மாசனத்தைப் போல இருந்தது.+ மனுஷ சாயலில் ஒருவர் அந்தச் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார்.+ 27 அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகம் வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தைப் போல, அதாவது நெருப்பு போல, பிரகாசித்தது.+ அதற்கு மேலாகவும் அப்படித்தான் பிரகாசித்தது. அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்குக் கீழாக நெருப்பு போலத் தெரிந்தது.+ அவரைச் சுற்றிலும் ஒரே வெளிச்சமாக இருந்தது.

  • தானியேல் 7:9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 9 அதற்குப் பின்பு, சிம்மாசனங்கள் வைக்கப்பட்டன. யுகம் யுகமாக வாழ்கிறவர்+ தன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தார்.+ அவருடைய உடை பனிபோல் வெண்மையாக இருந்தது,+ அவருடைய தலைமுடி பஞ்சுபோல் வெள்ளையாக இருந்தது. அவருடைய சிம்மாசனம் தீக்கொழுந்துகளாகவும் அதன் சக்கரங்கள் எரிகிற நெருப்பாகவும் இருந்தன.+

  • அப்போஸ்தலர் 7:55
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 55 அவரோ, கடவுளுடைய சக்தியால் நிறைந்தவராக, வானத்தை உற்றுப் பார்த்து, கடவுளுடைய மகிமையையும் அவருடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதையும் பார்த்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்