9 காட்டு எருது உனக்கு வேலை செய்யுமா?+
ராத்திரியில் அது உன்னுடைய தொழுவத்தில் தங்குமா?
10 அதைக் கயிற்றால் கட்டி உழுவதற்காகக் கொண்டுபோக உன்னால் முடியுமா?
பள்ளத்தாக்கை உழுவதற்காக அது உன் பின்னால் வருமா?
11 அதற்கு இருக்கும் அபார பலத்தை நம்பி,
கடினமான வேலைகளை அதற்குக் கொடுப்பாயா?