13 அந்தக் குத்துவிளக்குகளுக்கு நடுவில் மனிதகுமாரனைப் போன்ற ஒருவரையும்+ பார்த்தேன். பாதம்வரை நீளமான ஓர் உடையை அவர் போட்டிருந்தார், மார்பில் தங்க இடுப்புக்கச்சையைக் கட்டியிருந்தார்.
16 அவருடைய வலது கையில் ஏழு நட்சத்திரங்கள் இருந்தன.+ இரண்டு பக்கமும் கூர்மையான நீண்ட வாள் ஒன்று அவருடைய வாயிலிருந்து புறப்பட்டது.+ அவருடைய முகம் நடுப்பகலில் பிரகாசிக்கிற சூரியனைப் போல் இருந்தது.+
15 தேசத்தாரை வெட்டிப் போடுவதற்காகக் கூர்மையான நீண்ட வாள்+ ஒன்று அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. இரும்புக்கோலால் அவர்களை அவர் நொறுக்குவார்.*+ அதோடு, சர்வவல்லமையுள்ள கடவுளுடைய கடும் கோபம் என்ற திராட்சரச ஆலையில் திராட்சைப் பழங்களை மிதிப்பார்.+