1 நாளாகமம்
8 பென்யமீனின்+ மகன்கள்: மூத்த மகன் பேலா,+ இரண்டாம் மகன் அஸ்பேல்,+ மூன்றாம் மகன் அகராக், 2 நான்காம் மகன் நோஹா, ஐந்தாம் மகன் ரஃபா. 3 பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா,+ அபியுத், 4 அபிசுவா, நாகமான், அகோவா, 5 கேரா, செப்புப்பான், ஊராம். 6 கெபா+ நகர மக்களுக்கு ஏகூத்தின் மகன்கள் தலைவர்களாக இருந்தார்கள்; மானகாத் என்ற இடத்துக்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். தந்தைவழிக் குடும்பத் தலைவர்களாக இருந்த ஏகூத்தின் மகன்கள்: 7 நாகமான், அகியா, கேரா; கேராவின் தலைமையில் அவர்கள் மானகாத்துக்குக் கொண்டுபோகப்பட்டார்கள். இவர் ஊத்சாவுக்கும் அகியூத்துக்கும் தகப்பன். 8 மோவாப் பகுதியில் குடியிருந்த மக்களை* சகராயீம் துரத்திவிட்டார்; அதன் பின்பு, அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள். ஊசிமும் பாராளும் அவருடைய மனைவிகள். 9 அவருடைய இன்னொரு மனைவியான ஓதேஸ் மூலம் அவருக்குப் பிறந்த மகன்கள்: யோபாப், சீபீயா, மேசா, மல்காம், 10 எயூஸ், சாகியா, மிர்மா. இவர்களே அவருடைய மகன்கள், தங்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.
11 அவருடைய மனைவி ஊசிம் அவருக்கு அபிதூப்பையும் எல்பாலையும் பெற்றாள். 12 எல்பாலின் மகன்கள்: ஏபேர், மீஷாம், சாமேத் (இவர் ஓனோவையும்+ லோதுவையும்+ அதன் சிற்றூர்களையும்* கட்டினார்), 13 பெரீயா, சேமா. இவர்கள் ஆயலோன்+ நகர மக்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் காத் நகரத்தில் குடியிருந்தவர்களைத் துரத்திவிட்டார்கள். 14 அகியோ, சாஷாக், எரேமோத், 15 செபதியா, ஆராத், ஏதேர், 16 மிகாவேல், இஷ்பா, யோஹா ஆகியோர் பெரீயாவின் வம்சத்தில் வந்தவர்கள்; 17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஹேபெர், 18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் ஆகியோர் எல்பாலின் வம்சத்தில் வந்தவர்கள்; 19 யாக்கிம், சிக்ரி, சப்தி, 20 எலியேனாய், சில்த்தாய், ஏலியேல், 21 அதாயா, பெராயா, சிம்ராத் ஆகியோர் சீமேயியின் வம்சத்தில் வந்தவர்கள்; 22 இஸ்பான், ஏபேர், ஏலியேல், 23 அப்தோன், சிக்ரி, ஆனான், 24 அனனியா, ஏலாம், அந்தோதியா, 25 இபிதியா, பெனூவேல் ஆகியோர் சாஷாக்கின் வம்சத்தில் வந்தவர்கள்; 26 சம்சேராய், ஸெகரியா, அத்தாலியா, 27 யரெஷியா, எலியா, சிக்ரி ஆகியோர் எரோகாமின் வம்சத்தில் வந்தவர்கள். 28 வம்சாவளிப் பட்டியலின்படி, இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்களாக இருந்தார்கள். இந்தத் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தார்கள்.
29 கிபியோனின் தகப்பனான எயியேல் கிபியோனில்+ குடியிருந்தார். அவருடைய மனைவி பெயர் மாக்காள்.+ 30 அவருடைய மூத்த மகன் அப்தோன்; மற்ற மகன்கள்: சூர், கீஸ், பாகால், நாதாப், 31 கேதோர், அகியோ, சேகேர். 32 மிக்லோத்தின் மகன் சிமியா. இவர்கள் எல்லாரும் எருசலேமில் தங்களுடைய சகோதரர்களுக்குப் பக்கத்தில், மற்ற சகோதரர்களுடன் குடியிருந்தார்கள்.
33 நேரின்+ மகன் கீஸ்; கீசின் மகன் சவுல்;+ சவுலின் மகன்கள்: யோனத்தான்,+ மல்கிசூவா,+ அபினதாப்,+ எஸ்பால்.*+ 34 யோனத்தானின் மகன் மெரிபால்.*+ மெரிபாலின் மகன் மீகா.+ 35 மீகாவின் மகன்கள்: பித்தோன், மேலேக், தரியா, ஆகாஸ். 36 ஆகாசின் மகன் யோகதா; யோகதாவின் மகன்கள்: அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி. சிம்ரியின் மகன் மோசா. 37 மோசாவின் மகன் பினியா; பினியாவின் மகன் ரப்பாஹ், ரப்பாஹின் மகன் எலியாசா, எலியாசாவின் மகன் ஆத்சேல். 38 ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்களுடைய பெயர்கள்: அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான். இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் மகன்கள். 39 அவருடைய சகோதரன் எசேக்கின் மகன்கள்: மூத்த மகன் ஊலாம், இரண்டாம் மகன் எயூஷ், மூன்றாம் மகன் எலிப்பேலேத். 40 ஊலாமின் மகன்கள் மாவீரர்கள், அம்பு எறிவதில் வல்லவர்கள்; இவர்களுக்கு நிறைய மகன்களும் பேரன்களும் இருந்தார்கள், மொத்தம் 150 பேர். இவர்கள் எல்லாரும் பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.