“இது எங்களை ஒன்றாக நெருங்கிவரச் செய்திருக்கிறது” நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
இப்படியாக நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தைப் பற்றி ஒரு மனைவி எழுதினாள். “நான் இதை ஓரளவுக்கு வாசித்துவிட்டேன்” என்று அவள் சொல்கிறாள். “ஆனால் ஒரு புத்தகத்தை இவ்வளவு அனுபவித்து நான் ஒருபோதும் வாசித்தது கிடையாது. என் கணவர் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு புறப்பட்டு போனவுடன் நான் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு மணிநேரம் வாசிப்பேன். அது மனதைக் கிளர்ச்சியடையச் செய்கிறது! என் கணவர் மதிய உணவுக்காக வீட்டுக்கு வருகையில் நான் வாசித்த புதிய காரியங்களை கேட்க காத்திருக்கிறார். இது எங்களை ஒன்றாக நெருங்கி வரச் செய்திருக்கிறது!”
நீங்களும்கூட இந்தப் புத்தகத்தைக்குறித்து அத்தனை கிளர்ச்சியடைந்து நீங்கள் வாசித்தக் காரியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தப் புத்தகம் உண்மையில் வாதத்துக்கு இடமளிக்கும் ஒவ்வொரு பைபிள் போதகத்தையும் கலந்தாராய்கிறது. அத்தாட்சிகளை அத்தனை சுருக்கமாகவும் புரிந்துக் கொள்ளத்தக்க வகையிலும் ஒன்றாகச் சேர்த்துத் தருவதால் வாசகருக்குப் பதில் தெளிவாக தெரிந்துவிடுகிறது. இந்தப் பத்திரிகை அளவேயுள்ள பக்கங்களைக் கொண்ட 256 பக்கப் புத்தகம் கற்பிப்பதற்கு 150 படங்களை, பெரும்பாலானவற்றை அழகிய வர்ணத்தில் கொண்டிருக்கிறது. இப்பொழுதே தருவித்துக் கொள்ளவும் ரூபாய் 30 மட்டுமே.
தயவுசெய்து நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ30 அனுப்பியுள்ளேன்.