“இது சுற்றிவளைத்து பேசுவதில்லை”
இந்தக் கடினமான காலங்களில் வளர்வது அவ்வளவு எளிதல்ல. இளைஞர் அநேக புதிய சூழ்நிலைகளைச் சந்திக்கின்றனர். அவர்கள் கனத்தத் தீர்மானங்களை எடுக்க வேண்டும். நான் குடிக்க வேண்டுமா? போத மருந்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? எதிர்பாலரில் ஒருவரிடமாக எப்படிப்பட்ட நடத்தை சரியானது? இளைஞருக்கு சுற்றிவளைத்திடும் பதில்கள் அல்ல, பலன் தரும் பதில்கள் தேவை. இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற புத்தகத்தை வாசித்த வடக் கரோலினாவிலுள்ள கிரீன்ஸ்பொரோச் சிறுமி பின்வருமாறு எழுதினாள்:
“இந்தப் புத்தகத்தை வாசிப்பதில் நான் மிகவும் மகிழ்ந்தேன். இதிலுள்ள உண்மைகளும் ஆலோசனைகளும் சரியான வழிநடத்துதலைக் கொண்டிருக்க இளைஞருக்கு உதவும். இந்தப் புத்தகம் நன்கு புரிந்துகொள்ளக்கூடியதும் ஒவ்வொரு பிரச்னைக்கும் அருமையான உதாரணங்களைக் கொண்டதுமாய் இருக்கிறது. இதை ஒருமுறை வாசிக்க ஆரம்பித்தால், கீழே வைக்க மனதில்லை, அந்தளவுக்கு அதன் அதிகாரங்கள் அக்கறைக்குரியவையாய் இருக்கின்றன. சொல்லப்போனால், இது சுற்றிவளைத்து பேசுவதில்லை, ஆனால் பிரச்னைக்கு நேரடியான பதில்களைக் கொடுக்கிறது.
“மொத்தத்தில் இந்தப் புத்தகம் தவிர்க்கமுடியாதளவில் அற்புதமானது, உண்மையானது, அருமையானது, . . . இந்தப் புத்தகம் எவ்வளவு சிறந்த ஒன்று என்பதை விவரிக்க வார்த்தைகள் போதது. இந்தப் புத்தகத்தை நான் எல்லாருக்குமே தாராளமாய்ப் பரிந்துரை செய்வேன், விசேஷமாக இளைஞருக்கு.”
கவர்ச்சிகரமாய் விளக்கப்படங்களுடன்கூடிய 320 பக்கங்களையுடைய இந்தப் புத்தகத்திலிருந்து நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நன்மையடைவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கூப்பனைப் பூர்த்தி செய்து அனுப்பி ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற 320 பக்கங்களடங்கிய புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இத்துடன் ரூ15 அனுப்பியுள்ளேன். (இலங்கையில் விலை ரூ45.00)