திருடர்களைத் தண்டிக்கும் மரங்கள்
சில நாடுகளில் கிறிஸ்மஸ் மரம் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கு இன்றியமையாததென கருதப்படுகிறது, ஆனால் தங்களுக்கு ஒரு மரம் தேவைப்படுகிற எல்லாரும் அதற்குரிய பணத்தைச் செலுத்த மனமுள்ளோராய் இல்லை. ஐக்கிய மாகாணங்களிலுள்ள பூங்காக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பலவற்றின் வழிநடப்புரிமைகளுக்குரிய இயற்கை நிலக்காட்சிகள் மரம் திருடுவோரால் தாக்கப்பட்டுள்ளன. நல்ல உயர்தர ஊசியிலை மரம், ஸ்புரூஸ், அல்லது தேவதாரு ஆகியவற்றைத் தேடி திருடர்கள், அந்த நிலம் எவருக்குரியதாயினும் கவலையில்லாமல், அவற்றை வெட்டிவீழ்த்தி இழுத்துக்கொண்டு சென்றனர்.
சில மாகாணங்கள் எதிர்த்துச் சண்டையிடத் தொடங்கின. கடந்த ஆண்டின் கிறிஸ்மஸ் காலத்தின்போது, பல்வேறு வடநிலப்பகுதிகளிலிருந்த அதிகாரிகள் மரங்களின்மீது தனிப்பட்ட இரசாயனப் பொருளைத் தெளிக்கத் தொடங்கினர். குளிருள்ள திறந்த வெளியில் அது கவனிக்கத்தக்கதாயில்லை, ஆனால் ஒரு மரம் பத்திரமாய் உள்ளே அந்தத் திருடனின் அனலான பகல்நேர அறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கையில், அந்த இரசாயனம் தானிருப்பதை வெளிப்படுத்தியது. The Wall Street Journal என்ற பத்திரிகை சொல்லுகிறபிரகாரம், அது “எரு உண்டாக்கும் தொழிற்சாலையைப்போல்” துர்நாற்றம் வீசுகிறது.
பல ஆண்டுகளாக இந்தப் பட்டணம் நூற்றுக்கணக்கான மரங்களைத் திருடரிடம் இழந்துள்ளது. ஆனால் கவர்ச்சியூட்டுபவையாகத் தோன்றும் மரங்கள் உண்மையில், துர்நாற்ற வெடிகள் என திருடவிருப்போரை எச்சரித்து உள்ளூர் செய்தித்தாளில் அறிவிப்புகள் வைத்தது முதற்கொண்டு திருடுதல் குறைந்துவிட்டதென்று, கனக்டிக்கட்டிலுள்ள மன்ரோ பூங்காவைக் கண்காணிப்பவர் மதிப்பிடுகிறார். (g90 12/22)