‘யாரோ ஒருவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்று அறிவது ஆறுதலளிப்பதாய் இருக்கிறது’
சில மக்கள் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறார்கள், ஆனால் பயங்கரமாக உணருகிறார்கள். எது உதவ முடியும்? அக்கறையும் புரிந்துகொள்ளுதலும் முக்கியமானவை. கடந்த வருடம் அப்படிப்பட்ட ஓர் ஆள் நியூயார்க்கில், புரூக்லினிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு எழுதினார்:
“மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் என்ற துண்டுப்பிரதியை இப்போதுதான் வாசித்தேன். இரசாயன சமநிலையின்மை காரணமாக அவ்வப்போது ஏற்படும் மனச்சோர்வால் நான் அவஸ்தைப்படுகிறேன். இந்தத் துண்டுப்பிரதி மிகவும் ஆறுதலளிப்பதாய் இருக்கிறது.
“மனச்சோர்வின் சம்பந்தமாக நம்பிக்கை இருக்கிறது, மேலும் அதைச் சமாளிப்பதற்கு வழிகள் இருக்கின்றன என்று அறிவதும் ஆறுதலளிப்பதாய் இருக்கிறது. மனச்சோர்வால் அவஸ்தைப்படும் என்னைப் போன்ற மக்களுக்காக அக்கறைகொள்ளும், புரிந்துகொள்ளும் ஒருவர் இருக்கிறார் என்று அறிவதும் ஆறுதலளிப்பதாய் இருக்கிறது.”
இந்தத் துண்டுப்பிரதி ஒரு குறைந்த இடத்தில் அதிகத்தைச் சொல்லுகிறது. அந்தப் பிரதி ஒன்றையோ மேலுமான தகவலையோ பெற நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watchtower, H-58 Old Khandala Road, Lonavla., Mah., 410 401 India, அல்லது பக்கம் 5-லுள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள்.
[பக்கம் 32-ன் படம்]
மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல்