உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குங்கள்
அ.ஐ.மா.-வின் தென் கரோலினாவில் உள்ள ஒரு நோயாளி, குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் என்ற துண்டுப்பிரதியைத் தனது நர்ஸுகளில் ஒருவருக்கு அனுப்பி வைத்தபோது, அந்த நர்ஸ் தொலைபேசியில் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். தன்னுடைய கணவரோடு அந்தத் துண்டுப்பிரதியைப் பகிர்ந்துகொண்டு இருவரும் சேர்ந்து போற்றுதலுடன் அதைப் படித்ததாக அந்த நர்ஸ் சொன்னார். உண்மையில், குடும்பங்களுக்கு உதவியளிக்க அவ்வளவு நம்பிக்கையூட்டக்கூடிய விஷயம் கிடைக்கும் என்று அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை என்பதாக அந்த நர்ஸ் சொன்னார்.
அந்த நோயாளி விவரித்தார்: “குடும்பத்தில் இருக்கவேண்டிய பொருத்தமான மற்றும் நம்பிக்கைகரமான காரியங்களைப்பற்றி தானும் தன்னுடைய கணவரும் பேசிக்கொண்டிருந்த அதே தகவலாகத்தான் அது இருந்தது என்றும், ஆனால் அந்த விஷயத்தைப்பற்றி அச்சடிக்கப்பட்ட எவையேனும் கிடைக்குமா என்பதைப்பற்றி அறியாதவர்களாக இருந்தனர் என்றும் அந்த நர்ஸ் என்னிடம் கூறினார். தான் போகிற இடமெல்லாம் அந்தச் சிறிய துண்டுப்பிரதியை தன்னோடு கொண்டுசென்று அதைத் திரும்பத் திரும்ப வாசிப்பதாகச் சொல்லி தொலைபேசி உரையாடலை முடித்தார். குடும்ப வாழ்க்கையைப்பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் என்னிடம் இருக்குமானால் தயவுசெய்து தான் காண்பதற்குக் கொடுக்கும்படியும் சொன்னார்.”
உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தை அந்த நோயாளி அந்த நர்ஸுக்கு அனுப்பிவைத்து, அவரோடு சேர்ந்து அதைப் படிக்க ஒன்றுகூடி வருவதற்கான திட்டத்தையும் போட்டார். உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்க உதவும் தகவல்களை நீங்களும் மதித்துப் போற்றலாம். குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள், உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் ஆகியவற்றின் பிரதியைப் பெற நீங்கள் விரும்பினாலோ, அல்லது ஒரு இலவச வீட்டு பைபிள் படிப்பு நடத்தப்படும்படி விரும்பினாலோ, தயவுசெய்து Watchtower, H-58, Old Khandala Road, Lonavla, 410 401, Mah., என்ற முகவரிக்கோ அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்ட பொருத்தமான முகவரிக்கோ எழுதுங்கள்.